முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் மூடப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது – தயாசிறி
முஸ்லிம்களும் சரி சிங்களவர்களும் சரி அவர்களில் அதிகமானவர்கள் அடிப்படைவாதிகள் அல்ல. முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்கள் மூடப்படவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு விடயமாகும் என்று குருநாகல் மாவட்ட எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் பௌத்த மற்றும் இஸ்லாமிய அடிப்படை வாதங்கள் என்று இப்போது இரண்டு அடிப்பபடைவாதங்கள் இருக்கின்றன. பௌத்த அடிப்படைவாதத்தை ஆரம்பித்தது ஜாதிக ஹெல உறுமயவாகும். இதனை ஜனாதிபதியே பயன்படுத்தினார். என்றும் தற்போது நாட்டில் தலைதூக்கியுள்ள இவ்வடிப்படைவாதத்தினை உடனடியாக நாட்டிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments
Write Down Your Responses