அமெரிக்க விசாவிற்காக புலிகளை காட்டி கொடுத்த சம்மந்தன் - விக்கி லீக்ஸ்
”என்னுடைய தேவைக்காக நான் யாரையும் காட்டிக் கொடுப்பன் யாரும் என்னை கேட்க முடியாது”
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான சில நுண்ணிய தகவல்களை தமக்கு தெரிவித்து வருபவர் சம்பந்தன் ஐயா தான் என, அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளதாக ஆதாரபூர்வமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 2004ம் ஆண்டு ஜூன் மாதம் , அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார் சம்பந்தர். ஆனால் அமெரிக்காவில் உள்ள அதிகாரிகள் அவருக்கு விசா தர மறுத்துள்ளார்கள். இதற்கான காரணம் என்னவென்றால், சம்பந்தன் ஐயா ஒரு விடுதலைப் புலிகளின் அபிமானி என்பதனால் என்று கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து தனக்கு தெரிந்த நபர் ஒருவர் ஊடாக சம்பந்தர் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தை அணுகியுள்ளார். இதனையடுத்து, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜூன் மாதம் 10ம் திகதி, தமது தலைமைக்கு பாதுகாப்பான கேபில் மூலமாக ஒரு செய்தியை அனுப்புயுள்ளது.
டபுள் 00 என்று குறியிடப்பட்டுள்ள இந்த இரகசியத் தகவலை, விக்கி லீக்ஸ் கைப்பற்றி தற்போது வெளியிட்டுள்ளது. விக்கி லீக்ஸ் தரவுகள் இணையத்தில் இருந்து இச் செய்தியைப் பெற்று வெளியிடுகிறது.
இந்த இரகசியத் தகவலில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எமக்கு அவ்வப்போது, விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு குறித்து தகவல்களை வழங்கிவந்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் உள்வீட்டு தகவல்கள் பலவற்றை நாம் பெற்றுக்கொள்ள சம்பந்தனே காரணமாக அமைந்துள்ளார். சமாதான கால கட்டத்தில் இவை முக்கியமானவை. என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் தனது இரகசிய தகவலில் குறிப்பிட்டுள்ளார். (விக்கி லீக்ஸ் ஆதாரங்கள் இணைப்பு)

0 comments
Write Down Your Responses