முன்னாள் நீதியரசரை சர்வதேசம் அழைக்கிறது!!!
முன்னாள் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவுக்கு சர்வதேச அமைப்புக்களினால் அழைப்புக்கள் வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. இதேநேரம் முன்னாள் பிரதம நீதியரசர் பதவி விலக்கப்பட்டமை குறித்து சர்வதேச நாடுகள் பல இலங்கை நாட்டுக்கு தமது அதிருப்தியை வெளிக்காட்டின. குற்றப் பிரேரணை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது. என்றாலும் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக அவர் கடமையாற்ற முடியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்றாலும், அரசுடனுள்ள கருத்து முரண்பாட்டினால் அவ்வாறு செயற்பட முடியுமா? என்பதும் கேள்விக் குறியே என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை எந்தவாரு ஊடகத்திற்கும் அவர் எந்தவொரு செய்தியையும், அறிக்கையையும் வழங்கவில்லை. அவ்வாறு அவர் கருத்து வெளியிட்டால் அது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மிகவும் அவதானமாக இருக்கிறார் என்றும் அறியக்கிடக்கின்றது. (கலைமகன் பைரூஸ்)
0 comments
Write Down Your Responses