தேசிய கீதத்தில் தமிழ் மொழியை உள்ளடக்கினால் நாட்டில் பாரிய பிரச்சினை தோன்றும்- பிரதம சங்கநாயக்கர்
நடைமுறையில் உள்ள தேசிய கீதத்தை எல்லா இனமக்களும் மதிக்கின்றனர். இதனை மாற்றும் அரசியல்வாதிகளின் முயற்சி அதிர்ச்சி அளிக்கிறது. இது இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சி தேசிய கீதத்தில் தமிழ்மொழியையும் உள்ளடக்கினால் பாரிய பிரச்சினை உருவாகும் என்று சிறிலங்கா ராமன்ய பீடத்தின் பிரதம சங்கநாயக்க வண. நபன பிறேமசிறி நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே பிரதம சங்கநாயக்கர் இதனைத் தெரிவித்துள்ளார். மடவளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் தேசிய கீதத்தினுள் தமிழ்மொழியும் சேர்க்கப்பட்டால், நாட்டில் மேலும் பல பிரச்சினைகள் தோன்றும்.
எல்லா இனத்தவர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலேயே, இந்த தேசியகீதம் 1940களில் இயற்றப்பட்டது.
நாட்டில் உள்ள எல்லா இன மக்களிடையேயும் இது சகோதர உணர்வை ஏற்படுத்துகிறது. இதனை மாற்றும் அரசியல்வாதிகளின் முயற்சி அதிர்ச்சி அளிக்கிறது. என்றார்.
0 comments
Write Down Your Responses