மரதன் ஓடிய தேசியப் பாடசலை மாணவி மரணம்
மரதன் ஓடிக்கொண்டிருந்த சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலையில மாணவி வடிகானில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சிலாபத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதில் கௌசல்யா பவித்ராணி (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பாடசாலையில் நடைபெறவிருக்கின்ற இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு மரதன் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.
இவ்வாறு நடத்தப்பட்ட மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வடிகானில் விழுந்த மாணவியை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போதில் அவர் உயிரிழந்துவிட்டார்.
0 comments
Write Down Your Responses