இந்தியகுடியரசு தினத்தில் 8 இடங்களில் குண்டுவெடிப்பு தீவிரவாதிகள் அட்டகாசம்
இந்தியாவின் 64வது குடியரசு தின நிகழ்வின் போது இந்தியாவில் சில இடங்களில் குண்டு வெடிப்புக்களை நிகழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். தீவிரவாதிகள்.
வடகிழக்கு மாநிலங்களில் செயல்பட்டு வரும் உல்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் குடியரசு தினத்தை புறக்கணிக்கப்போவதாக முன்பு அறிவித்திருந்தன.
இந்நிலையில் நேற்று குடியரசு தினம் நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் உல்பா தீவிரவாதிகள் நேற்று கோல்பாரா மற்றும் துப்ரி மாவட்டங்களில் குண்டுகளை வெடிக்கச்செய்தனர்.
எம்.எல்.ஏ. வீடு, சந்தை, பள்ளி உள்பட 8 இடங்களில் இந்த குண்டுகள் வெடித்தன. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த செய்திகள் உடனடியாக தெரியவில்லை.
கோல்பாரா மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. மொய்னுதின் அகமது வீட்டில் முதல் குண்டு வெடித்தது. அப்போது திவிரவாதியை மக்கள் அடையாளம் கண்டு கொண்டனர். உடனே அவரை அடித்து நொறுக்கினர்.
அப்போது மோட்டர் சைக்கிளில் வந்த மூவர் அவரை மீட்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. அதில் அந்த தீவிரவாதி இறந்து விட்டதாகவும் ஆதாரப்பூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன.
0 comments
Write Down Your Responses