தனியார் பஸ்களில் பிச்சை எடுக்கத் தடை
தனியார் பஸ்களில் பிச்சை எடுப்பதால் ஏற்படுகின்ற இடையூறுகளை கவனத்திற் கொண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து தனியார் பஸ்களில் பிச்சை எடுத்தல் மற்றும் விற்பனைகளில் ஈடுபடுவதை தடைசெய்யத் தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் பஸ்களில் பிச்சை எடுத்தல் மற்றும் விற்பனைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும இதற்கு பொலிஸ் மாஅதிபரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments
Write Down Your Responses