ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் - அமெரிக்கா நம்பிக்கை
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணைக்கு கடந்தவருடம் ஆதரவளித்தது போலவே இந்த முறையும் இந்தியா முழுமையாக ஆதரவளிக்கும் என்று அமெரிக்கா நம்பிக்கை கொண்டிருப்பதாக இந்திய ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவில் 2வது தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளது.
இலங்கைக்கு எதிராக கொண்டுவரவிருக்கின்ற இந்த புதிய தீர்மானம் நேரடியான – நடைமுறைத் தீர்மானமாக இருக்கும். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக் கோரும் 2012 ஆம் ஆண்டு தீர்மானத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் ஜேம்ஸ் மூர் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments
Write Down Your Responses