சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 300 வாக்குச்சீட்டுக்களும் உண்மையானவை –தேர்தல் ஆணையாளர்
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராக அன்னம் சின்னத்தில் களமிறங்கியிருந்த முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிற்கு புள்ளடியிடப்பட்டிருந்த நிலையில் கண்டெக்கப்பட்ட 300 வாக்குசீட்டுகளும் லொறிச் சாரதியின் கவனக்குறைவினால் தவறவிடப்பட்டதாகவும் இதற்கு தான் பொறுப்பேற்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
கண்டெடுக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் வாக்குகளாக கணக்கில் எடுக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் என்பதனை உறுதிப்படுத்துகிறேன்.
வாக்குச்சீட்டுகள் உண்மையானவை அவை வாக்குகளாக கணக்கில் எடுக்கப்பட்டவை என்பதனை நான் உறுதிப்படுத்துவேன். லொறி சாரதியின் கவனக்குறைவால் இந்த வாக்குச்சீட்டுக்கள் விழுந்துள்ளன. என்றார்.
இதேவேளை 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது அன்னம் சின்னத்திற்கு புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் கலகெடிஹேன பிரதேசத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டிருந்தன. இவை நுவரேலியா மாவட்டத்திற்கு சொந்தமானவையென தெரிவிக்கப்படுகின்றது.
0 comments
Write Down Your Responses