சருமத்தை பளபளப்பாக்கும் மீன்-வாரத்தில் 3 நாட்கள்...!
மீனில் காணப்படும் `ஓமேகா 3′ என்ற பொருள், நம் சரும செல்களை புதுப்பிப்பதோடு, சருமத்தை பளபளக்கவும் செய்கிறது. அதனால், வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை சாப்பிடலாம்.சோயாபீன்சை வாரத்துக்கு 3 நாள் உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் புதுப்பொலிவுடனும், ஈரப்பசையுடனும் இருக்கும். முகப்பருக்களும் வராது.
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் சருமத்தை பொலிவுடன் வைக்கும். ஆரஞ்சு, பப்பாளி, பூசணி, மாம்பழம் சாப்பிட்டாலும் சருமம் பொலிவுடன் இருக்கும்.
சிலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவர்களது முகத்தில் ஏதோ ஒரு சோகம் இழையோடிக் காணப்படுவதுபோல் இருக்கும்.
இப்படிப்பட்டவர்கள் தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது நல்லது. அவ்வாறு தண்ணீர் குடித்து வந்தால் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஈரப்பசையுடன் இருக்கும். குறைந்தது ஒரு நாளுக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதற்கு மேல் குடித்தாலும் தப்பில்லைதான்.
0 comments
Write Down Your Responses