சிகிச்சைக்கு வந்த பெண்ணைக் வல்லுறவுக்கு உட்படுத்திய வைத்தியர் இந்தியாவின் புனேயில் சம்பவம்
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் சிகிச்சைக்கு வந்த பெண்ணொருவரை சிகிச்சையளிக்க வந்த வைத்தியர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புனேயின் மாடர்ன் கல்லூரி மைதானத்தில் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் தேதி துர்கா பூஜை நடைபெற்றது.
இதில் கலந்துகொள்வதற்காக கணவன் மற்றும் குழந்தைகளுடன் வந்திருந்த 30 வயது பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக அந்தப்பெண் வாஷியில் உள்ள லோட்டஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரவில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் ஐ.சி.யு. வார்டில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைக்குப் பிறகு நர்ஸ் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அப்போது அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் விஷால் வன்னி (வயது 26), தூக்க மருந்து கலந்த ஊசி போட்டுள்ளார்.
பின்னர் அந்தப் பெண்ணை கற்பழித்துள்ளார். காலையில் கண்விழித்து பார்த்த அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை கணவனிடம் கூற, அனைவரும் டாக்டரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அவர் மீதான வழக்கு தானே கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நிதிபதி சந்தியா பச்சாவ், சிகிச்சைக்கு வந்த பெண்ணை கற்பழித்த டாக்டர் விஷாலுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
0 comments
Write Down Your Responses