மத்தியவங்கி மீதான புலிகளின் தாக்குதல் இன்றுடன் 17 ஆண்டுகள்.
இலங்கையின் பொருளாதார மையமான மத்திய வங்கி மீது எல்ரிரிஈ பயங்கரவாதிகள் தாக்குதல் நடாத்தி, இன்றுடன் 17 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 1996 ம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி இத்தாக்குதல் இடம்பெற்றது. 440 இறாத்தல் எடைகொண்ட அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்களை ஏற்றிய லொறியொன்று, இலங்கை மத்திய வங்கியின் பிரதான படலையை தோசம் செய்து கொண்டு, மத்திய வங்கியை தாக்கியது.
தற்கொலை குண்டுதாரியான ராஜூ செலுத்திய வந்த அந்த லொறியில் ஏற்றப்பட்டிருந்த வெடிபொருட்கள், மத்திய வங்கியை மட்டுமல்லாது, அருகில் உள்ள 8 க்கும் மேற்பட்ட கட்டிடங்களையும் அழித்தொழித்தது. இதனால் 91 பேர், மரணமடைந்ததுடன், ஆயிரத்து 400 பேர், காயமடைந்தும், நூற்றுக்கணக்கானோர், தமது கண்பார்வையையும் இழந்தனர்.
இலங்கையில் மட்டுமல்லாமல், முழு உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த தாக்குதலில், இலங்கையர்கள் மட்டுமல்லாமல், 2 அமெரிக்க பிரஜைகளும், 6 ஜப்பானியர்களும், நெதர்லாந்து பிரஜையொருவரும் காயமடைந்தனர்.
முழு நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இதுபோன்ற தாக்குதல் நடைபெற்ற யுகத்திற்கு, தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், பாதுகாப்பு படைவீரர்களின் அர்ப்பணிப்புடன், 2009ம் ஆண்டு புலிப் பயங்கரவாதம் முற்றாக துடைத்தெறியப்பட்டது.
இதனால் மக்கள் தற்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர். இலங்கை மத்திய வங்கியை மீள கட்டியெழுப்பி, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில், அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டது.
0 comments
Write Down Your Responses