முஸ்லீம்களுக்கு எதிராக பௌத்த விகாரைகளில் துண்டுப்பிரசுரங்கள் வினியோகம் - காணிகளும் விற்க கூடாது !
போயா தினங்களில் முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டும் விதத்திலான துண்டுப்பிரசுரங்கள் பௌத்த விகாரைகளில் வினியோகம் செய்யப்பட்டதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். இவை நேற்றும் விகாரைகளில் வினியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
போயா தின பூஜைவழிபாடுகளின் பின்னரே இவை வினியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முஸ்லீம்களுக்கு காணி வீடு விற்க கூடாதென்றும் முஸ்லீம் கடைகளில் பொருட்கள் கொள்வனவு செய்யக் கூடாதென்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
0 comments
Write Down Your Responses