வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்து வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டம்.
வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துமாறு கோரி சகோதரத்துவத்திற்கான மக்கள் அரண் அமைப்பினால் வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை நடாத்தப்பட்டுள்ளது.மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் உட்பட சகோதாரத்துவத்திற்கான மக்கள் அரண் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன் போது 'வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகத்தை உறுதிசெய்', 'சட்டவிரோதக் கைதுகள், கடத்தல்களை உடனடியாக நிறுத்து', 'வடக்கில் நடத்தும் காணி அபகரிப்பை உடன் நிறுத்து', 'அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்', 'கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்' ஆகிய கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியதுடன், பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.
0 comments
Write Down Your Responses