பாலியலை லஞ்சமாக கேட்ட பிரதேசசபை உறுப்பினர் கைது
மொனராகலை, படல்கும்புர பிரதேச செயலகத்தின் செயலாளர் பாலியல் லஞ்சம் பெற முயற்சித்த போது கைது செய்யப்பட்டதாக லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
படல்கும்புர, புத்தல வீதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனக்கு இருப்பதற்கு காணி இல்லை என கேட்டு பிரதேச செயலாளரிடம் போய் பேசியுள்ளார் இதனை கேட்ட பிரதேச செயலாளர் அந்த பெண்ணிடம் உம்முடைய பெயருக்கு அரச காணி. ஒன்றை பதிவு செய்து தருவதாகவும் ஆனால் இவ்வாறு ஒரு காணியை உமக்கு வழங்க வேண்டுமாயின் நீர் என்னோடு உறவு கொள்ள வேண்டும் என பிரதேச செயலாளர் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பதுள்ளை துன்ஹிந்த பிரதேச ஹோட்டல் ஒன்றிற்கு பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் லஞ்சத்தை பெற்றுக் கொள்ள முயற்சித்த
வேளை பிரதேச செயலாளர் கைது செய்யப்பட்டதாக லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
0 comments
Write Down Your Responses