யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் ஏன்? தமிழர்கள் அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக வருகின்றனர் -ஜூலி பிஷப்
யுத்தம் முடிவக்கு வந்த நிலையில் இலங்கையில் இருந்து தமிழர்கள் அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கான பிரதான நோக்கம் என்ன? சட்டவிரோமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்காக என்ன? என்ன? வழிவகைகளை கையாள்கின்றனர். என அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிப் பிரதித்தலைவர் ஜூலி பிஷப் தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் கேள்வி கேட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிப் பிரதித்தலைவர் ஜூலி பிஷப்பிற்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதேவேளை, இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வோரை தடுப்பதற்கான நோக்கத்துடனேயே தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிப் பிரதித்தலைவர் ஜூலி பிஷப் கூறினார்.
0 comments
Write Down Your Responses