துண்டாடப்பட்டு சீரழிந்த பிரதித் தலைவர் பதவி எனக்கு எதற்கு? சீறிப்பாய்கிறார் ரவி!
துண்டாடப்பட்டு சீரழிக்கப்பட்ட பிரதித் தலைவர் பதவி தனக்கு வேண்டவே வேண்டாம் என்று ஐதேக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநயக்கா, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக நியமிப்பதற்கு தகுதியானவர்களாக சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்கா, லக்ஷ்மன் கிரிஎல்ல, ஏ.ஜே.எம். முஸம்மில், சுவாமிநாதன் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அந்தத் தகவல்களின் மூலம் அறியக்கிடக்கின்றது.
இது இவ்வாறிருக்க, நேற்று முன்தினம் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து நிபந்தனைகள் எதுவென்றாலும் அவற்றை ஏற்றுக் கொண்டு பிரதித் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வேன் என்று குறிப்பிட்டிருப்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments
Write Down Your Responses