இலங்கை வந்த அமெரிக்க உயர்மட்டக்குழவினர் முதலாவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இன்று சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டக்குழவினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பானது இன்று நண்பகல் அமெரிக்க தூதராலயத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கு விஜயம் செய்த இக்குழுவினர் முதலாவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இக்குழுவினல் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் தெற்காசியா மற்றும் பசுபிக் விவகாரங்கள் பிரிவின் மூன்று வெளியுறவு பிரதிச் செயலாளர்கள் அங்கம் வகித்துள்ளனர்.
0 comments
Write Down Your Responses