இலங்கைக்கு எதிராக ஜ.நா வில் மீண்டுமொரு தீர்மானம் கொண்டு வரப்படும் அமெரிக்கா அறிவிப்பு
இலங்கைக்கு எதிராக எதிர்வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கூட்டத்தொடரில் அமெரிக்கா மற்றுமொரு தீர்மானத்தை இம்முறை கொண்டுவரவிருக்கின்றது. இத்தீர்மானமானது மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற பேரவையின் கூட்டத்தொடரின் போதே கொண்டுவரவிருப்பதாக பிரதி உதவிச்செயலாளர் ஜேம்ஸ் மூர் தெரிவித்தார்.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஊக்குவிக்கும் வகையிலான நல்லிணக்கம் மற்றும் மேம்பாடு தொடர்பிலே 'நேரடியான மற்றும் செயல்முறையிலான தீர்மானத்தை' கொண்டுவரவிருக்கின்றதாகத் தெரியவருகின்றது.
இதேவேளை ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற் மனித உரிமைக்கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை முன்வைத்தது.
அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் கிடைத்தன. எட்டு நாடுகள் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளவில்லை.
0 comments
Write Down Your Responses