நடைபெறவுள்ள பொது நலவாய உச்சி மாநாட்டில் பிரிட்டிஸ் மகாராணி கலந்து கொள்ளவது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் இல்லை.
இலங்கையில் இடம் பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரிட்டிஸ் மகாராணியார் கலந்து கொள்வாரா? இல்லையா? என்பது குறித்து இதுவரை எந்தவிதமான தீர்மானவும் எடுக்கப்படவில்லை. என இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் அலிஸ்டர் பேர்ட் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவிற்கு இன்று விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பொதுநலவாய மாநாட்டில் மகாராணியார் கலந்து கொள்ளாதது எந்த வகையிலும் பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கு பாதகத்தை ஏற்படுத்த போவதில்லை என நான் நினைக்கின்றேன்.
பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் பிரிட்டிஸ் பிரதமர் கலந்து கொள்வது குறித்தும் எந்தவிதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் அலிஸ்ட் பேர்ட் தெரிவித்தார்.
0 comments
Write Down Your Responses