15 வயது சிறுமியைக் கடத்திய 26 வயது இளைஞன் பொலிஸாரால் கைது
கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியைக் கடத்திச் சென்ற 26 வயது இளைஞர் ஒருவர் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டப் பிரதப் பொலிஸ் மா அதிபர் எரிக் பேரேரா தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபருக்கும் சிறுமிக்கும் இடையில் சில மாதங்களாகத் தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..
0 comments
Write Down Your Responses