T.N.A. தலைவர் இரா சம்பந்தனின் அரசியல் சாதனைகள்
”சாதனையை வாசித்து தமிழ் தலைமைபற்றி சிந்தியுங்கள் உங்களையார் ஏமாற்றுபவர்கள் என்று”
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முடிசூடா மன்னன் என அழைக்கப்பட்டவருமான திரு ஜி.ஜி பொன்னம்பலம், அடங்காத் தமிழன் சி.சுந்தரலிங்கம், ஈழத்துக் காந்தி எஸ் ஜே.வி.செல்வநாயகம், தளபதி அ.அமிர்தலிங்கம், தேசியத் தலைவர் வே.பிரபாகரன் போன்றவர்களிலிருந்து, இன்றைய தமிழரசுக்கட்சி, தமிழ் தேசியக் கூடட்மைப்பு என்பனவற்றின் தலைவரான ஆர்.சம்பந்தன் வரை, அனைவருமே அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாகவும், சிங்களப் பேரினவாத மக்கள் விரோத ஐ.தே.கட்சியினருக்கு நேசசக்தியாகவும் இருந்து செயற்பட்டு வந்துள்னர்.
அதன் உச்ச ஆதரவான நிகழ்வே (01.05.2012)இல் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் அனுசரணையுடன் ரணில் விக்கிரமசிங்கா கலந்துகொண்ட மே தின நிகழ்வு.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் (08.09.2012)
இலங்கையில் நிர்வாகரீதியாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் (8) எட்டு மாகாண சபைகளில் கிழக்கு மாகாணம்,வடமத்திய மாகாணம் மற்றும் ஊவா மாகாணம் ஆகியவற்றிற்கான தேர்தல் 08.09.2012ல் நடைபெற்றது. இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் மட்டுமே பத்திரிகைகளின் கவனத்தினை ஈர்த்த தேர்தலாக அமைந்தது.
இதற்கான காரணம் அந்ததேர்தலில் பங்கு கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினர் ஆகிய இருசாராரினதும் தேர்தல் பிரச்சாரங்களில் என்றுமில்லாத அளவிற்கு இனவாதத்தை தலையில் தூக்கி வைத்து பேசியமையே.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும், சிறீ.ல.மு.காங்கிரஸினரும், கிழக்கில் மொத்தமான இனவாதக் கருத்துக்களை மக்கள் முன் வைத்து அவர்களின் உள்ளங்களில் நச்சு விதையினை விதைத்தமையின் அறுவடையே கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இன்று பெற்றுள்ள அறுவடையாகும். எனவே இவ்விரு சாராரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் கிழக்கில் இனவன்முறையினை தூண்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் தெற்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களில் ஒரு சாராரை தூண்டிவிடுவதற்கான அரசியலை ஜனாப் ரவூப் ஹக்கீம் அவர்கள் முன்னெடுத்தார். மேற்படி இரு சாராரினதும் நடவடிக்கைகள் தெற்கில் பிரதிபலித்ததற்கமைய அதற்கான பதில்கள் இன்று சில பௌத்த மதவாதிகளினால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றமை தெளிவாகின்றது. அத்துடன் இதுவிடயம் ஒய்ந்துவிடாது அவர்களின் எதிர்கால அரசியலுக்கு ஆபத்தாக அமையப் போவதும் தவிர்க்கமுடியாத விடயமாகவே அமையும்.
கிழக்கு மாகாணத்தின் மாகாண சபைத் தேர்தலில் (08.09.2012ல்) வாக்களிக்க தகுதிபெற்ற வாக்காளர்களின் இனரீதியான எண்ணிக்கை.
அம்பாறை மாவட்டம்

மாகாண சபைக்கான தேர்தல் (08.09.2012ல்) நடைபெற்றபோதும் மாகாண சபைக்கான முதலமைச்சர் 18.09.2012 இல் தெரிவுசெய்யப்பட்டார். நிர்வாகத்தில் அங்கம் வகிக்கும் ஏனையோரின் விபரம்

சம்பந்தனின் சாதனையில் உருவாக்கப்பட்ட இன்றைய மாகாண சபை நிர்வாகமும், முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனின் தலைமையில் உருவாக்கப்பட்ட அன்றைய மாகாண சபை நிர்வாகமும்.
மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் நிதி, திட்டமிடல், சட்டம், ஒழுங்கு, மாகாண நிர்வாகம், சுற்றாடல், மீள் குடியேற்றம் மற்றும் உள்ளுராட்சி கிராம வளர்ச்சி ஆகிய துறைகளை கவனிப்பார்.
எம்.ஐ.எம்.மன்சூர் (சிறீ.ல.மு.கா) சுகாதாரம், உள்நாட்டு மருத்துவம், விளையாட்டு, உணவு விநியோகம், மகளிர், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம், கூட்டுறவு, சமூக சேவைகள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜெயினுல் ஆபிதீன் அஹ்மத் நஸீர் (சிறீ.ல.மு.கா )விவசாயம், கால்நடை அபிவிருத்தி, சுற்றாடல், கிராமிய கைத்தொழில் மற்றும் மீன்பிடித்துறை ஆகிய துறைகள்.
எம்.எஸ். உதுமான் லெப்பை (தே.காங்கிரஸ்) வீதி அபிவிருத்தி, நீர்பாசனம் வீடு அமைப்பு, நிர்மாணத்துறை, கிராமிய மின் மற்றும் நீர் வழங்கல் ஆகிய துறைகள்.
விமலவீர திஸாநாயகாக்கு (ஐ.ம.சு.கூட்டமைப்பு) கல்வி, காணி, காணி அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் பண்பாட்டு அலுவல்கள் ஆகிய துறைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த மாகாண சபையில் அமைச்சர் பொறுப்புகளை வகித்திருந்த முன்னாள் மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், அமைசர் துரையப்பா நவரெட்னராஜா ஆசியோருக்கு இம்முறை அமைச்சுப் பதவிகள் எதுவும் வழங்கப்படாமை மட்டுமன்றி தமிழர்கள் எவருமே அமைச்சர்களாக நியமனம் பெறவில்லை.
கடந்த (10.08.2008ல்) நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களின் விபரம் பின்வருமாறு.
மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை, சந்திரகாந்தன் நிதி, திட்டமிடல், சட்டம், ஒழுங்கு, மாகாண நிர்வாகம், சுற்றாடல், மீள் குடியேற்றம் மற்றும் உள்ளுராட்சி கிராம வளர்ச்சி ஆகிய துறைகள்.
துரையப்பா நவரெத்னராசா விவசாயம், கால்நடை அபிவிருத்தி, சுற்றாடல், கிராமிய கைத்தொழில் மற்றும் மீன்பிடித்துறை ஆகிய துறைகள்.
சுபைர் (அ.இமு.கா) சுகாதாரம், உள்நாட்டு மருத்துவம், விளையாட்டு, உணவு விநியோகம், மகளிர், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம், கூட்டுறவு, சமூக சேவைகள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எம்.எஸ். உதுமான் லெப்பை (தே.காங்கிரஸ்) வீதி அபிவிருத்தி, நீர்பாசனம் வீடு அமைப்பு, நிர்மாணத்துறை, கிராமிய மின் மற்றும் நீர் வழங்கல் ஆகிய துறைகள்.
விமலவீர திஸாநாயக (ஐ.ம.சு.கூட்டமைப்பு) கல்வி, காணி, காணி அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் பண்பாட்டு அலுவல்கள் ஆகிய துறைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.

ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள்
26.01.2010ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் திரு.இரா சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், ஜனாப் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையிலான சிறீ.ல.மு.காங்கிரஸினரும் இணைந்து இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் ஆசனத்தில் முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா அவர்களை அமர வைப்பதற்கு தம்மாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இந்நிலையில் சரத் பொன்சேகாவின் சிறுபான்மை இனத்தவர் தொடர்பான கருத்து என்ன என்பதனை வாசகர்களின் அறிதலுக்கு இங்கு தருகின்றோம்.
(18.01.2010)இல் (26.01.2010ல் நடைபெற்றஉள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ”இலங்கை சிங்களவர்களுடையது” என நான் கூறவில்லை என- பொன்சேகா சொன்ன பெரும் பொய்!கனடாவில் இருந்து வெளிவரும் National Post எனும் பத்திரிகை யுத்தம் மூர்க்கம் கொண்ட நாட்களில் தமது நிருபர் Stewart Bel என்பவரை இலங்கைக்கு அனுப்பி அவருடைய விசாரணை அறிக்கைகளை 6 பாகங்களாக வெளியிட்டது. அதன் 5வது பாகத்தில் சரத் பொன்சேகா இக்கருத்தை National Post நிருபர் Stewart Bel இற்கு தெரிவித்திருந்தார்.
இவருடைய இந்த கருத்து ”இலங்கை சிங்களவர்களுடையது” என -நியாயப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.முன்னும் பின்னும் இதை நியாயப் படுத்தும் வாதங்களை சரத் முன்வைத்த கருத்துக்கு பொறுப்பேற்க மறுக்கிற மனிதரிடம் வேறு எந்தத்துறையில் நீதியை மக்கள்எதிபார்க்கமுடியும்?
அவருடைய கருத்தை பார்க்க http://www.nationalpost.com/news/story.html?id=832374
அத்துடன் ஜனாதிபதித் தோ்தல் நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சம்பந்தனின் சகாவான கே. துரைரத்னசிங்கம் (முன்னாள் பா.உ திருமலை மாவட்டம்)மாபெரும் பொய்யினை Prime TV என்னும் தொலைக்காட்சியில் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் வாக்காளர்களுக்கு தெரிவித்திருந்தார்.
0 comments
Write Down Your Responses