இலங்கையில் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் பிச்சைக்காரி – பொலிஸாரல் கைது
பிச்சையெடுப்பவர்களை எப்போது சமூகத்தில் தாழ்ந்தவர்களாகவே பார்ப்பார்கள். ஆனால் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒரு பிச்சைக்காரி மாதமொன்றிற்கு ஒரு லட்சத்திற்கு அதிகமாக சம்பாதிப்பது பெரும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிச்சை எடுத்து வந்த பெண்ணொருவர் கொழும்பு-நீர்கொழும்பு ரயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன.
இவரை கைது செயயும் போது இவரிடமிருந்து 1800 ரூபா வரை இருந்துள்ளது. இது அவர் ஒரு மணித்தியாலத்தில் பிச்சை எடுத்து உழைத்த பணமாகும் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் களனி விஹாரையில் போயா தினத்தில் 9000 ரூபாவிற்கு மேல் சம்பாதிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
தனது வயிற்றுப்பகுதியிலுள்ள ஒரு கட்டியை காண்பித்து மக்களின் அனுதாபத்தை பெற்று பிச்சை எடுத்துவருவதாக அவர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கட்டியை காண்பித்து பிச்சை எடுப்பதனால் தான் தனது பிள்ளைகளை படிக்கவைத்துக்கொண்டு செழிப்பான வாழ்வை நடத்தமுடிந்துள்ளது என பொலிஸாரை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்.
0 comments
Write Down Your Responses