பிரேசிலில் இரவு விடுதியில் பயங்கரத் தீ 245 பேர் இதுவரையில் பலி மீட்புப் பணி தொடர்கிறது
பிரேசில் நாட்டின் சாண்டா மரியா நகரில் 'கிஸ் நைட் கிளப்' என்ற இரவு விடுதியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 245க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த இரவு விடுதியில் நடந்த இசை கச்சேரியில் நிகழ்த்தப்பட்ட வான வேடிக்கையால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்பதால் விபத்து நடந்த போது சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் இரவு விடுதிக்குள் இருந்தனர். இவர்களில் பலர் உடல் கருகியும், மூச்சுத்திணறல் ஏற்பட்டும் உயிரிழந்தனர்.
'இதுவரை 159 பிரேதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்னும் அதிகம் பேர் உயிர் இழந்திருப்பார்கள் என தெரிகிறது. அனேகமாக, பலி எண்ணிக்கை 200ஐ தாண்டலாம்.' என மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மேஜர் ஜெர்சன் டா ரோசா பெனரரா கூறியுள்ளார்.
இதேவேளை மீட்பு பணியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.
0 comments
Write Down Your Responses