இரு மாணவிகள் பாலியல் வல்லுறவு; சந்தேக நபபர் கைது
கொழும்பிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையில் க.பொ.த. உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் இரு மாணவிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்விரு மாணவிகளையும் வத்தளைப் பகுதிக்கு அழைத்துச் சென்ற குளிர்பானத்துக்குள் மயக்க மருந்தினை கலந்து கொடுத்தே அவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர்.
34 வயதுடைய நபர் ஒருவரே இச்செயலைப் புரிந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. இச் சந்தேக நபர் இதற்கு முன்னரும் பாடசாலை மாணவியொருவரை தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து மிரட்டியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மாணவிகள் தமது பெற்றோரிடம் தெரிவித்திருந்தபோதிலும் முறைப்பாடு செய்யப்படவில்லை. இவ்விவகாரம் பாடசாலைக்கு தெரியவந்ததையடுத்தே குறித்த இரு மாணவிகளும் பாடசாலையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
0 comments
Write Down Your Responses