சச்சின் கொடுத்த அறிவுரையால்தான் இந்திய அணி சிறப்பாக விளையாடியது : சுரேஷ் ரெய்னா!!
சச்சின் கொடுத்த அறிவுரையால்தான் இந்திய அணி சிறப்பாக விளையாடியது என இளம் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா வென்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது பெற்ற சுரேஷ் ரெய்னா பேசுகையில் சச்சின் கொடுத்த அறிவுரையால்தான், இந்திய அணி சிறப்பாக விளையாடியது.
பீல்டிங்கில் அதிக கவனம் செலுத்தி விளையாட வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருந்தார். இந்திய அணியும் அவர் அறிவுரையை ஏற்று பீல்டிங்கில் அதிக கவனம் செலுத்தி விளையாடினோம், என்று ரெய்னா கூறியுள்ளார்.
அணியின் கேப்டன் தோனி இந்திய அணியின் வெற்றி குறித்து கூறுகையில், இந்த வெற்றி கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலன் என்றும், அணியில் இளம் வீரர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல் பட்டனர் என்றும் கூறியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, ஐ சி சி தரப்பட்டியலில் முதலாம் தரத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
0 comments
Write Down Your Responses