ரீட் மனு விசாரணைக்காக மேன் முறையீட்டு நீதிமன்றில் அரச தரப்பும், ஜ.தே.கவும் ஆஜராகாது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் ரீட் மனு நாளை 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, ஐ.தே.க. உறுப்பினர்களளும் அரசாங்க உறுப்பினர்களும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டார்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.அரச தரப்பில்
அமைச்சர் டிலான் பெரேராவே அரசாங்க உறுப்பினர்கள். மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு செல்லமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
நாம் ஏன்? நாளை நீதிமன்றத்திற்கு போகமாட்டோம் என்பதற்கான விளக்கத்தை கொடுக்கும் அறிக்கை ஒன்றை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுப்பார் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே தெரிவித்தார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகரை நீதின்மன்றத்தில் நாளை 3 ஆம் திகதி ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி அறிவிப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments
Write Down Your Responses