தேசிய கீதம் தமிழ்ச் சொற்களுடன் கூடி பாடப்படும் - செயற்படுத்த முன்வருகிறார் வாசு!
இலங்கைத் தேசிய கீதத்தில் தமிழ்ச் சொற்களும் ஒன்றிணைக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற பிரேரணையை தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு முன்வைத்துள்ளது.
அந்தப் பிரேரணையை திணைக்களம் பாராளுமன்ற ஆலோசனை சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதோடு, கடைசித் தீர்மானத்திற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தற்போது தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வேறுவேறாகவே பாடப்படுகின்றது. சிங்கள தமிழ்ப் பதங்கள் இணைக்கப்பட்டுப் பாடப்படவுள்ள தேசிய கீதம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நான்காம் திகத, தேசய சுந்திர தின விழாவின் போது பாடப்படுவதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேசிய விழாக்கள் அல்லாதவற்றில் என்றும் போல தேசிய கீத்த்தைப் பாடலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
(கலைமகன் பைரூஸ்)
0 comments
Write Down Your Responses