கட்டுரைப் போட்டி மூலம் முஸ்லிம்கள் மதமாற்ற செய்ய முனைகிறார்கள் - குற்றம் சாட்டுகிறார் ஓமல்பே
இஸ்லாம் மதத்திற்கு முஸ்லிம் அல்லாதவர்களை இணைத்துக் கொள்ளும் தந்திரமொன்று நடந்துவருவதாக குற்றம் சாட்டுகிறார்கள் தேசிய சிஹல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர்.
சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதம் 18, 19 ஆம் திகதிகளில் முஸ்லிம் சமய கலாச்சார மையத்தனால் கட்டுரைப் போட்டியொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததை பத்திரிகைகள் வாயிலாக அறிந்தோம் என்று குறிப்பிடும் தேரர்,
‘இந்தக் கட்டுரைப் போட்டியின் தலைப்பு மனிதாபிமானத்துடன் உலகை வெற்ற உத்தமர் முஹம்மத் நபி நாயகம் என்பதாக இருந்தது. கட்டுரைப் போட்டியில் பங்கு கொள்வதற்கான முக்கிய முதல் நிபந்தனை என்ன தெரியுமா? அனைத்துப் போட்டியாளர்களும் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பது.
இது முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாமிய மதத்திற்குள் இணைத்துக் கொள்வதற்கான பெரும் தந்திரம் இந்த நிபந்தனையிலிருந்து நாம் என்ன விளங்கிக் கொள்கிறோம். எனவே, நாம் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், எங்களுக்குள் உள்ள புனித ஒற்றுமையை அழித்துவிட வழிவகை செய்யாதீர்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments
Write Down Your Responses