தமிழ் இளைஞர் யுவதிகளை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளவும். தளபதிக்கு கோத்தா ஆலோசனை
படையில் இணைவதற்கு தகமைகளை கொண்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்க இராணுவத் தளபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேற்கண்டவாறு தான் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்று ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி , தமிழ் இளைஞர் யுவதிகள் படையில் இணைவதற்கு எந்த தடைகளும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கிளிநொச்சி பகுதியிலிருந்து சுமார் 100 பெண்கள் இராணுவத்தில் இணைந்து கொண்டபோது அதற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தும் அவர்களால் எதையும் சாதிக்க முடியாமல் போனமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments
Write Down Your Responses