இடது காலிற்கு பதிலாக வலது காலில் சத்திரசிகிச்சை செய்த யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள்.-படங்கள் இணைப்பு
சத்திரசிகிச்சையென்றிற்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்ற சிறுவன் ஒருவனின் காலை மாறி சத்திரசிகிச்சை செய்து சிக்கலில் சிக்கியுள்ளனர்; யாழ்,போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள். இச்சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 15ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.
இதில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த தி.கயலக்ஷன் வயது 9 என்ற சிறுவனுக்கே கால் மாறி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இடது காலிலுள்ள கட்டியென்றை அகற்றுவதற்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளச் சென்ற சிறுவனுக்கு வலது காலில் வைத்தியர் சத்திரசிகிச்சை செய்துள்ளார்.
சத்திர சிகிச்சை முடிந்து விடுதிக்கு மீண்டும் பிள்ளையை மாற்றியபோது சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய இடது காலுக்கு பதிலாக வலது காலில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் பின்னர் இது தொடர்பில் வைத்தியர்களுக்கு அறிவித்து உடனடியாகவே மீண்டும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிறுவனின் கட்டி அகற்றப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ தவறுகளுக்கு எதிராக குரல் கொடுத்த திடீர் மரண விசாரணை அதிகாரி மு.உதயசிறிக்கு எதிராக யாழ்.போதனா வைத்தியர்கள் போர் கொடி துர்க்கியுள்ளதோடு மருத்துவ தவறுகள் இடம்பெறவில்லையென்றும் தெரிவித்திருந்தனர்.
இப்போது யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் என்ன சொல்லகிறார்கள்...?
0 comments
Write Down Your Responses