கையிருப்பில் இருந்த நெல்லும் சந்தையில்
அரசாங்க கையிருப்பிலுள்ள மொத்த நெல் தொகையையும் பெரும்போக நெல் கொள்வனவின் பொருட்டு களஞ்சியங்களை தயார்படுத்தும் நோக்கில் சந்தைக்கு விநியோகிப்பதற்கும்,அரிசியாக மாற்றுவதற்காக ஆலை உரிமையாளர்களுக்கு விநியோகிக்கவு தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு செயலாளர் டபிள்யூ.ஏ.சகலசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போது அரசாங்கத்தின் கையிருப்பில் சுமார் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் நெல் கையிருப்பில் இருக்கின்றது இவை அனைத்தையும் வினையோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட துறைவார்ந்த அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் திறைசேரி பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கடந்த தினங்களில் எற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்புக்குள்ளான வயல்களை இரண்டு மாதங்கள் முன்கூட்டியே பண்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
உரிய காலத்திற்கு முன்னதாக அறுவடையை மேற்கொள்வதன் ஊடாக செய்கை பாதிப்பை எதிர்நோக்கியிருந்த விவசாயிகளுக்கு பொருளாதார நீதியாக நிவாரணம் கிட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments
Write Down Your Responses