பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரம், விதை நெல்
கடந்த தினங்களில் நிலவிய சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல பகுதிகளில் நெற் செய்கை பாதிக்கப்பட்டது பாதி்க்கப்பட்ட நெற்செய்கையை மீண்டும் ஆரம்பிக்கும் விவசாயிகளுக்கு இலவசமாக விதை நெல்லும் உரமும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட வருகை தந்த பிரதி அமைச்சர் தற்கோது வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆய்வுகளின் முடிவில் தேவைப்படும் விவசாயினகளுக்கும் உதவிகள் வளங்கப்படும் என பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
மேலும் இப்பகுதிக்கு வருகை தந்த போது விவசாயிகளுக்கான உரத்தினை எடுத்து வரும் படி தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ் உரம் உடனடியாக விநியோகிக்கப்படுமெனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
0 comments
Write Down Your Responses