கஸகஸ்தானில் விமான விபத்து 27 பேர் பலி
கஸகஸ்தானில் இடம்பெற்ற விமான விபத்தில் 20 எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் உட்பட 27பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.விபத்திற்குள்ளான விமானத்தில் அன்டனோ-72 ரக விமானப்படை விமானமொன்றில், முன்னாள் சோவியத் நாடுகளின் எல்லைப் பாதுகாப்புப்படை பதில் தலைவராக செயற்பட்டுவரும் கேணல் துர்ஹன்பெக் ஸ்டம்பெகோ தலைமையிலான 20 எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரிகளும் 7 விமான ஊழியர்களும் அஸ்டானாவிலிருந்து புறப்பட்டனர்.
புறப்பட்ட விமானம் செய்ம்கென்ட் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர் என்றும் சுமார் 800 மீற்றர் உயரத்தில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த விமானம் பாரிய வெடிச்சத்தத்துடன் கீழே விழுந்து நொருங்கியதாக இச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணத்தினை உடனடியாக அறியமுடியவில்லை எனவும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் கஸகஸ்தானின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அறிவித்துள்ளனர்.
0 comments
Write Down Your Responses