முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் பறந்தது புலிக்கொடி
முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியானது இன்று பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. முல்லைத்தீவில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்திற்கு முன்னாலேயே இக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இக்கொடி இனந்தெரியாத நபர்களினாலேயே பறக்கவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2004ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்த மக்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காக சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 8.30 மணிக்கு விசேட பூசை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டடிருந்தன.
இந்த நினைவாலயத்திற்கு முன்னால் உள்ள பொதுநோக்கு மண்டபத்தின் தண்ணீர் தாங்கியின் மேல் இன்று காலை 6 மணியளவில் இந்த புலிக்கொடி ஏற்றப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
காலை 7 மணிக்கு சம்பவம் இடத்திற்கு வந்த இராணுவத்தினர், புலிக்கொடியை அங்கிருந்து அகற்றியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை அண்மையில் யாழ்ப்பாணத்திலும் தீருவில் மாவீரர் துயிலும் இல்லதிலும் புலிக்கொடி பறக்கவிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments
Write Down Your Responses