காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு
யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுமி நான்கு வயது சிறுமியொருவர் யாழ்.தீவகப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இதில் மண்டைத் தீவைச்சேர்ந்த சுரேந்திரன் சுதந்தினி என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டவராவார். இவர் நேற்று முன்தினம் காணாமல் போனதாகவும் ஆனால் இன்று வெள்ளிக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமியின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
0 comments
Write Down Your Responses