சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்தது
நாட்டின் பல பாகங்களிலும் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 40பேர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகவே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக தெரிவித்த மேற்படி அதிகாரிகள், இவற்றில் பெரும்பாலான மரணங்கள் மாத்தளை மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டனர்.
இதேவேளை நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது.
0 comments
Write Down Your Responses