சிறுமியை விகாரைக்கு அழைத்து வல்லுறவுக்கு உட்படுத்திய பிக்குவிற்கு விளக்கமறியல்
15 வயதுடைய சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படும் பௌத்த பிக்கு ஒருவரை விளக்கமறியிலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.மூன்று மாதங்களுக்கு முன்னர் 15 வயதான சிறுமியை ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அநுராதபுரம் பிரதேசத்தில் மஹகெலேகம சுதர்சனாராம விகாரையைச் சேர்ந்த பிக்குவை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பௌத்த பிக்கு ஒருவரை நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தினர்.
இதன்போது குறித்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பிக்குவை அடுத்தமாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சிறுமியை முறைப்பாடொன்று உள்ளதாகக் கூறி விகாரைக்கு அழைத்துள்ள குறித்த பிக்கு அங்குள்ள அறையொன்றில் வைத்தே சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
0 comments
Write Down Your Responses