மன்னார் ஆயரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
இலங்கையிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுதல் தொடர்பில் ஆயரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் மன்னார் ஆயர் வண. ராயப்பு ஜோசப்பிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஆயரிடமிருந்து பல வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மன்னார் ஆயரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்வது இது முதல் தடவையல்ல.
இலங்கை கடற்படையினரால் இவ்வாண்டு 2822 புகழிடகோரிக்கையாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புகழிடகோரிக்கையாளர்களுக்கு வசதியளிப்பாளர்களாக இருந்த 200 பேர் உட்பட 450 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவிலிருந்து 600 புகழிட கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments
Write Down Your Responses