கடவுளின் பெயரால் நிதி சேகரித்த 9 பேர் விளக்கமறியலில்!
சிவனொளிபாதமலைக்கு பௌத்த கடவுளின் சிலையை கொண்டு செல்லும் பெரஹராவுடன் இணைந்து கடவுளின் பெயரால் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பெரஹரா கைது செய்யப்பட்ட 12 பேரில் ஒன்பது பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் மூவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிவனொளிபாதமலைக்கு பௌத்த கடவுளின் சிலையை கொண்டு செல்லும் பெரஹரா எட்டியாந்தோட்ட பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அநாவசியமான முறையில் நிதி சேகரித்த குற்றச்சாட்டில் 12 பேர் எட்டியாந்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் இவர்களில் மூவர் 12 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் என்பதுடன் இவர்களிடம் இருந்து 11,979.50 ரூபா பணமும் ஐந்து சிலைகளும் மீட்கப்பட்டன.
சிவனொளிபாதமலையின் விகாராதிபதி அல்லது நிர்வாகத்தின் அனுமதி இன்றி குறித்த நபர்கள் பொது மக்களிடம் நிதி சேகரித்ததாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.
0 comments
Write Down Your Responses