மாற்றம் பெறும் திருகோணமலை
2013 பெப்ரவரி 4 ஆம் திகதி தேசிய சுதந்திர தின விழாவை திருகோணமலை மாவட்டத்தில் நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் திருகோணமலை மாவட்டத்தின் பெட்ரிக் கோட்டை பிரதேசம், மற்றும் நகர அபிவிருத்தி செயற்திட்டங்கள் ஊடகாக பல அபிவிருத்தி திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வபிவிருத்தி திட்டங்களில் நெடுஞ்சாலைகள், குடிநீர், மின்சாரம் சுகாதார மற்றும் சுத்திகரிப்பு வசதிகளும் அடங்கியுள்ளதுடன் இந்த செயற்பாடுகளை பிரதி அமைச்சர் விஜய தஹநாயக்க விஜயம் செய்து பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டு வருகிறார்.
திருகோண மலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டநிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் அமுல்படுத்தவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் திருகோணமலை மாவட்ட செயலக அலுவலகத்தில் பிரதி அமைச்சர் விஜய தஹநாயக்க தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.
0 comments
Write Down Your Responses