அநுராதபுரத்தில் சில இடங்களில் மஞ்சள் மழை
நாட்டில் ஏற்கனவே மீன் மழை சிவப்பு மழை மஞ்சள் மழை என்பன பெய்த நிலையில் அநுராதபுரம், திரிப்பனே, 50 ஏக்கர் அத்துன்கம மற்றும் லபுனோருவ ஆகிய பிரதேசங்களிலும் இன்று மஞ்சள் மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். சீரற்ற காலநிலையால் ஏற்கனவே தொடர்ச்சியான மழை நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் நிலையிலேயே இம்மழையும் பெய்துள்ளது.
இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பித்த இந்த மஞ்சள் மழை சுமார் 10 நிமிடங்கள் வரை இந்த மழை நீடித்ததாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
0 comments
Write Down Your Responses