இந்திய கார்னிகோபர் திருமலையில் நங்கூரமிட்டது.
திருகோணமலை துறைமுகத்திற்கு நேற்று வந்தடைந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலான 'கார்னிகோபர்' (Carnicobar) கப்பலை இலங்கை கடற்படையினர் கலாச்சார ரீதியாக வரவேற்றுள்ளனர்.இக்கப்பல் நேற்று முதல் இன்று வரை இரண்டு நாட்கள் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இரு நாடுகளின் கடற்படையினருக்கிடையே நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையின் கிழக்கு கட்டளைத் தளபதி மற்றும் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments
Write Down Your Responses