வவுனியாவில் தீரென்று பெய்த பச்சை மழை
மீன்மழை, சிவப்பு மழை, மஞ்சள் மழை, முதலை மழை இவற்றின் தொடர்ச்சியாக வவுனியாவில் பச்சை மழை பெய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பச்சை மழை மதவாச்சி – வவுனியா பிரதான வீதியில் அமைந்துள்ள யக்காவெள கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பெய்துள்ளதாக பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை நேரப்படி நேற்று மாலை 3.10 மணியளவில் இந்த மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இளம் பச்சை நிறத்தில் மழைத்துளிகள் விழ ஆரம்பித்ததாகவும் அந்நிறம் படிப்படியாகக் குறைவடைந்துச் சென்றதாகவும் தெரிவித்த பிரதேசவாசிகள், இந்த மழையின் போது சேகரித்த நீரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
0 comments
Write Down Your Responses