மாதகல் கடற்பகுதியில் கரையெதுங்கிய இந்திய றோலர், மீனவர்கள் ஏழு பேர் கடற்படையால் கைது
இயந்திரக் கோளாறினால் ஏழு இந்தியர்களோடு தமிழக மீனவர்களின் இழுவைப் படகொன்று கரையொதுங்கியுள்ளது. யாழ்.மாதகல் பகுதியில் இந்தப்படகு இன்று கரையொதுங்கியதாக கடற்படையினர் தெரிவித்தனர்.மீனவர்கள் பிரயாணம் செய்த படகு பழுதடைந்த நிலையில் கரையெதுங்கிய மீனவர்கள் அனைவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்பதற்காக இரண்டு படகுகள் இலங்கை கடற்பகுதிக்குள்ளாக பிரவேசிப்பதற்கு கடற்படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
படகுகள் வந்ததும் இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
0 comments
Write Down Your Responses