யாழில் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் 45 பேர் இதுவரை கைது
பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் யாழ்ப்பாணத்தில் இதுவரையில் 45 பேர் வரையில் கைது செய்ப்பட்டு விசாரணை செய்யப்படுவதாகத் தெரியவருகின்றது. கடந்த சில கிழமைகளாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இதேவேளை இவர்கள் அனைவரும் தமீழிழ விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவர்கள் மீது மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் போது இவர்கள் மீது ஏதாவது குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் வழக்கு தொடரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இச்சம்பவங்கள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழவின் யாழ்.பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
0 comments
Write Down Your Responses