யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக தெற்கு பல்கலைக்கழகங்களில் துண்டுப் பிரசுரங்கள்
பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் தெற்கு பல்கலைக்கழகங்களில் வினியோகிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மாணவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற தோரணையிலேயே தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் இத் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கப்படுகின்றன.
இந்நிலையில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இணைந்து பல்கலைக்கழகத்தில் புலிகள் ஆதரவு சக்தியை ஏற்படுத்துவதாக அந்த பிரசுரம் சுட்டுகிறது
மேலும் குறித்த துண்டுப் பிரசுரத்தில் ஜே.வி.பி அமைப்பிலிருந்து பிரிந்து சென்றிருந்த மாற்றுக்குழு (மக்கள் போராட்டக் குழு) உறுப்பினர்களும், தெற்கில் வெளிவாரியாக அரசாங்கத்திற்கெதிரான புலிகளின் நிலைப்பாட்டினை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக குறித்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
0 comments
Write Down Your Responses