முதலாவது மாதாந்த சம்பளத்தைப் பெற்றுக் கொண்ட இராணுவத்தில் இணைந்த தமிழ் யுவதிகள்
இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ் யுவதிகளுக்கு முதல் மாதச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தமிழ் பெண்களை இராணுவத்தில் இணைத்தது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சில தமிழ் கட்சிகளும் அமைப்புக்களும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வந்த நிலையிலேயே இவர்களுக்கான முதல் மாதச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னர் அறிவிக்கப்பட்ட படி சுமார் 33 ஆயிரம் ரூபா வரையில் முதல் மாதச் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இராணுவத்தில் இணைக்கப்பட்டு பயிற்சியின் ஒரு மாதத்தை பூர்த்தி செய்துள்ள தமிழ் பெண்கள் இராணுவ வாழ்வுக்கு தம்மை பழக்கப்படுத்தின் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு இவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் பயிற்சியை முன்னெடுப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
0 comments
Write Down Your Responses