யாழ் வர்த்தகர்களின் வயிற்றில் புளியை கரைத்து ஊற்றிய யாழ் மேயர்.
நாடு முழுவதும் புத்தாண்டு வியாபாரம் களைகட்டியுள்ளது. கொட்டும் மழையிலும் வியாபரம் ஆங்காகங்கே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. வடக்கின் சிறு நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரைக்கும் வெளிமாவட்ட அங்காடிகள் சென்றுள்ளனர். இவர்களில் சிங்களவர்களும் அடங்குகின்றனர். அங்காடிகள் தமது பொருட்களை மலிவு விலையில் விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் அங்காடிகளையும் ஆங்காங்கே வெளிமாவட்டதிலிருந்து யாழ் வந்து தற்காலிக கடைகளை அமைத்துள்ள வியாபரிகளையும் தேடி செல்கின்றனர். பொதுமக்களுக்கு எங்கு பொருள் எங்கு மலிந்த விலையில் கிடைக்கின்றதோ அங்கே செல்வார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை.
இவ்விடயம் யாழ் வர்த்தகர்களுக்கு கடும் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் வர்த்தகர்கள் பொருட்களை பதுக்கி வைத்து சந்தர்ப்பம் பார்த்து விலை ஏற்றி பணம் சம்பாதித்து சுவை கண்டவர்கள். யுத்தம் நடைபெற்றபோது இவர்கள் அடித்த கொள்ளைக்கு அளவே கிடையாது.
இந்நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் யாழ் மாநகர சபை யாழ் சந்தையை திறந்த வெளியாக்கியுள்ளது. வெளிமாவட்ட வர்த்தகர்கள் வந்து வியாபாரம் செய்வதற்கு ஏற்றவற்றை செய்து கொடுத்துள்ளது. மாநகர சபை முதல்வரின் இச்செயற்பாடு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள அதே நேரத்தில் யாழ் வர்த்தகர்களை பெரும் கடுப்புக்கு உள்ளாக்கியிருக்கின்றது.
0 comments
Write Down Your Responses