முச்சக்கர வண்டியில் வந்தவர்களால் குடும்பத்தர் கடத்தல்-யாழ்.மானிப்பாயில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடத்தப்பட்டவரின் உறவினர்கள் இம் முறைப்பாட்டை பொலிஸில் மேற்கொண்டுள்ளனர். இதில் நடராஜா கலியுகராஜா (வயது 47) என்பவரே கடத்தப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் வருகைதந்த இனந்தெரியாத சிலரே இவரை கடத்திச்சென்றுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments
Write Down Your Responses